ஜம்மு: 90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதற்கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18 மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25ஆம் தேதி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், இன்று (அக்.1) மூன்றாம் கட்ட மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த வாக்குப்பதிவு மொத்தம் 40 தொகுதிகளுக்காக நடைபெறுகிறது. இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 11.60 சதவீத வாக்குகள், 11 மணி நிலவரப்படி 28.12 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 44.08 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மொத்தமாக வாக்குப்பதிவு அக்டோபர் 6ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.