அஸ்வரப்பேட்டை (தெலங்கானா):தெலுங்கானா மாநிலம், அஸ்வரப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட ரெகெல்லகும்பு கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பல ஆண்டுகளாக சாலை வசதி உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாததால், கடந்த 9 மாதங்களில் மட்டும் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
ரேகெல்லாகும்பு என்ற பழங்குடியின கிராமத்தில் 45 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகை197. இதில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 34 குழந்தைகள், 13 கைக்குழந்தைகள் மற்றும் 8 கர்ப்பிணிகள் உள்ளனர்.
இந்த மக்களின் பெரும் பிரச்னையாக இருப்பது, அஸ்வரப்பேட்டையில் இருந்து ரேகல்லகும்புனா கிராமத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், ஆறுகளைக் கடந்து காட்டுப் பகுதிக்கு 7 கி.மீ நடந்து செல்ல வேண்டும். இதன் காரணமாக, இங்குள்ள கர்ப்பிணிகளுக்கு உறிய மருத்துவ சிகிச்சை எடுக்க முடியாமல் குழந்தைகள் உயிரிழக்கின்றனர் என அங்குள்ள பழங்குடியின மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி இடிமி பேசுகையில், “மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் யாரும் எங்கள் வீட்டிற்கு வருவதில்லை. எப்போதாவது ஒரு முறை கிராமத்தைச் சுற்றிப் பார்க்க வருவார்கள். அப்போது ஊருக்குள் யாரும் இருக்க மாட்டார்கள், எல்லோரும் வயல் வெளியில் வேலை செய்து கொண்டு இருப்பார்கள்.
இதனால் மருத்துவர்களைச் சந்திக்க முடிவதில்லை. மருத்துவர்கள் கிராமத்திற்கு வருவதற்கு முன்கூட்டியே தகவல் கொடுத்தால் நன்றாக இருக்கும். இல்லை என்றால், அவர்களைச் சந்திக்க 7 கி.மீ தூரம் நடந்து சென்று பார்க்க வேண்டியுள்ளது" என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, மற்றொரு கிராமவாசியான லட்சுமி கூறுகையில், “ரெகெல்லகும்புவில் உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலிருந்து வழங்கப்படும் பால், முட்டை உள்ளிட்ட எந்த விதமான உணவுப் பொருள்களையும் வழங்குவதில்லை.