பெங்களூரு :கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மைசூரு நோக்கி பெண் ஒருவர் தனது பேத்தியுடன் அரசு பேருந்தில் பயணித்து உள்ளார். மேலும், இருவரும் இரண்டு ஜோடி லவ் பேர்ட்ஸ் பறவைகளை உடன் எடுத்துச் சென்று உள்ளனர். மாநில அரசின் சக்தி திட்டத்தின் கீழ் இருவரும் பேருந்து நடத்துனர் கட்டணம் வசூலிக்கவில்லை.
அதேநேரம் இரண்டு ஜோடி கிளிகளை உடன் எடுத்து சென்றதற்காக இருவரிடம் 444 ரூபாயை நடத்துநர் கட்டணமாக வசூலித்து உள்ளார். தற்போது இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. அதாவது 4 கிளிகளுக்கு சிறுவர் சிறுமியர்களுக்கு வழங்கப்படும் அரை டிக்கெட் கட்டணமாக 111 ரூபாய் என மொத்தம் நான்கு கிளிகளுக்கு 444 ரூபாயை நடத்துநர் கட்டணமாக வசூலித்து உள்ளார்.