தாகா:இந்தியா-வங்க தேசத்தின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின்போது வங்க தேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துகள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று இந்தியா கூறியது. ஆனால், எந்த ஒரு நாடும் தங்கள் நாட்டின் உறவுகள் மீது தலையிடுவதற்கு உரிமையில்லை என்று வங்கதேசம் கூறியிருக்கிறது.
வங்கதேசத்தில் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி வெடித்ததையடுத்து கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஷேக் ஹசீனா அரசு வீழ்ந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் முஹம்மது யூனுஸ் இடைக்கால அரசை அமைத்ததில் இருந்தே, இந்துகள் தொடர்ந்து குறிவைத்து தாக்கப்படுவது குறித்து மீண்டும், மீண்டும் இந்தியா வலியுறுத்தி உள்ளது. இதன் பின்னர் முதன்முறையாக இருநாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்திலான சந்திப்பு வங்கதேச தலைநகர் தாகாவில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துகள் மீது தாக்கப்படுவது போன்ற வருந்தத்தக்க சம்பவங்கள் நடைபெறுவதாக இந்தியா தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், இது தவறாக வழிநடத்தக் கூடிய, போலியான தகவல் என்றும் உள்நாட்டு விவகாரத்தில் எந்த ஒரு நாடும் தலையிட முடியாது என்று வங்கதேசம் கூறியிருக்கிறது.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலார் விக்ரம் மிஸ்ரி, "சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாப்பதும், சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் உள்ளிட்டவை குறித்து இந்தியாவின் கவலைகள் குறித்து வங்கதேசத்தின் வெளியவுத்துறை செயலாளர் முகமது ஜாஷிம் உதீனிடம் எடுத்துக் கூறினேன்.
இதையும் படிங்க:"உ.வே.சாமிநாதர் பிறந்த நாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும்" - முதலமைச்சர் அறிவிப்பு!
கலாச்சாரம், மதம், தூதரக சொத்துகள் மீது தாக்குதல்கள் உள்ளிட்ட சில வருந்தத்தக்க செயல்கள் குறித்து நாங்கள் ஆலோசனை மேற்கொண்டோம். இதன்மூலம் வங்கதேச அதிகாரிகள் இந்த விஷயங்களில் ஒரு ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். மேலும் இந்த உறவை சாதகமான, முன்னெடுப்புடன் கூடிய ஆக்கப்பூர்வமான திசையில் செல்லும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்,"என்றார்.
திங்கள் கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அறிக்கை வெளியிட்ட வங்கதேச வெளியுறவுத்துறை இந்த விஷயத்தில் இந்திய ஊடங்கள் தவறான தகவலை கொடுத்திருப்பதாக கூறியிருக்கிறது. மேலும், இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள வங்கதேச அரசின் வெளியுறவுத்துறை செயலாளர்ஜாஷிம் உதீன்,"இந்தியாவில் வங்கதேசத்துக்கு எதிராக பாதகமான பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. அதனை நிறுத்துவதற்கு இந்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். இருநாடுகளுக்கு இடையே பரஸ்பரம் நம்பிக்கையை கட்டமைக்க வேண்டும்.
வங்கதேசத்தில் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நேரிட்ட புரட்சியைத் தொடர்ந்து வங்க தேசம் குறித்து இந்திய ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்புவதாகவும், புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் இங்குள்ள சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக விரோதமான அணுகுமுறை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறதுஅது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். வங்கதேசத்தில் உள்ள அனைத்து நம்பிக்கைகளையும் பின்பற்றும் நபர்கள், தங்களின் மதரீதியான செயல்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளலாம் அதே நேரத்தில் எந்த ஒரு நாடும் எங்களது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை எதிர்பார்க்க வில்லை. இதர நாடுகள் உள்நாட்டு விவகாரங்களில் கருத்துத் சொல்வவதை வங்கதேசம் தவிர்க்கிறது. அவர்களும் நமக்கு ஒரே மாதிரியான மரியாதையைக் காட்ட வேண்டும்,"என்பதை ஜாஷிம் உதீன் வலியுறுத்தி உள்ளார்.