தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு: 4 பேரிடம் போலீசார் விசாரணை? - ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு 4 கைது

Rameswaram Cafe Blast: ராமேஸ்வரம் கபே வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By PTI

Published : Mar 2, 2024, 2:17 PM IST

பெங்களூரு :கர்நாடகா மாநிலம் ஒயிட் பீல்ட் சாலையில் உள்ள ராமேஸ்வரம் கபேயில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என ஏறத்தாழ 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடுப்பு சட்டமான உபாவின் கீழ் வழக்கு பதிவு செய்து பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 8 தனிப் படை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாக தகவல் பரவிய நிலையில், அதை போலீசார் உறுதிபடுத்த மறுத்துவிட்டனர். மேலும், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த நபர் குறித்த அடையாளங்களை வெளியிட்டனர்.

மேலும், சிசிடிவியில் காணப்பட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தார்வாத், ஹூப்ளி, மற்றும் பெங்களூரு பகுதிகளை சேர்ந்த நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :கர்நாடகா ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு: சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்? போலீசார் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details