தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பியூட்டி கேர், ஸ்பா என்ற பெயரில் ஹைடெக் பாலியல் தொழில்.. புதுச்சேரியில் ஐந்து பேர் கைது! - பாலியல் தொழில்

Puducherry prostitution arrest: புதுச்சேரி நகரப் பகுதியில் பியூட்டி கேர் மற்றும் ஸ்பா பெயரில் பாலியல் தொழில் நடத்திய ஐந்து பேரை பெரிய கடை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 12:51 PM IST

புதுச்சேரி:புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள Shine Beauty Care and Spa-வில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் கண்காணிப்பாளர் சுவாதி சிங் உத்தரவின்படி, காவல்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பாலியல் தொழில் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த ஆறு பெண்களை போலீசார் மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து பியூட்டி கேர் மற்றும் ஸ்பா உரிமையாளரான சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த சந்திரக்குமார் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த லதா ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஆண் வாடிக்கையாளர்களை அழைத்து வர உறுதுணையாக இருந்த கடலூரை கார்த்திகேயன் மற்றும் தேங்காய் திருட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் முதலியார் பேட்டை சேர்ந்த பரத் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் பணம் எண்ணும் இயந்திரம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட பியூட்டி கேர் மற்றும் ஸ்பா உரிமையாளர் ஏற்கனவே தி.நகர் காவல் நிலையத்தில் இதேபோன்று வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:பொதிகை ரயிலில் 30 கிலோ போதைப்பொருள் கடத்தல்.. கைதானவரின் சென்னை வீட்டில் சோதனை!

ABOUT THE AUTHOR

...view details