கவுசாம்பி (உத்தரப் பிரதேசம்):உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கவுசாம்பி மாவட்டத்தில், கோக்ராஜ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் பர்வாரி நகரில், இன்று (பிப்.25) பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 5 பேர் காயமடைந்து உள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
உ.பி கவுசாம்பியில் பட்டாசு ஆலை விபத்து - 4 பேர் உயிரிழப்பு! - உபி பட்டாசு ஆலை விபத்து
UP firecracker factory explosion: உத்தரப் பிரதேசம் மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பட்டாசு ஆலை விபத்து
By ANI
Published : Feb 25, 2024, 2:41 PM IST
இது குறித்து கவுசாம்பி எஸ்.பி பிரிஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “பர்வாரியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். 5 முதல் 6 பேர் வரை காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தொழிற்சாலை குடியிருப்பு பகுதியிலிருந்து வெகுதொலைவில் உள்ளது. அவர்களிடம் பட்டாசு தயாரிப்பிற்கான உரிமமும் இருந்தது” என தெரிவித்துள்ளார்.