கோரக்பூர்: உத்தரப்பிரதேசம் மாநிலம் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் வசித்த 25 வயது திருமணமான பெண் ஒருவர் கடந்த 2022-ஆம் ஆண்டு தனது கணவரின் வீட்டில் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி கோரக்பூருக்கு வந்ததாகவும் அங்கு, அந்த பெண்ணிற்கு உறவுக்காரர்கள் யாரும் இல்லாத காரணத்தால் தர்மஷாலா பஜார் பாலத்திற்கு அருகில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், அந்த பெண்ணின் தனிமையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, ஒரு கும்பல் அந்த பெண்ணை செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி 2022-ஆம் ஆண்டு கோரக்பூர் சந்திப்பில் இருந்து கடத்திச் சென்று தர்மஷாலா பஜார் ரயில் பாதையில் உள்ள புதர்களுக்குள் வைத்துக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அந்த சமயத்தில் அவர்களிடம் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில் உதவி கேட்டு சத்தம் எழுப்பியுள்ளார். ஆனால் அந்த பெண் பலாத்கார கும்பலால் கடுமையாகத் தாக்கிவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர் ஆபத்தான நிலையில் தனியாக ரயில்வே காவல்துறைக்கு விரைந்து செல்ல முடிவு செய்து, தன்னை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது புகார் அளித்தார், அதைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
இதனை அடுத்து காவல் துறையின் உதவியோடு, அந்த பெண் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் நீண்ட நேரம் சுயநினைவின்றி இருந்த நிலையில், சுயநினைவு திரும்பிய பிறகு, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கக் காவல் துறை அதிகாரிகளுக்கு இந்த சம்பவம் குறித்த விவரங்களைத் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் மேற்கொண்ட தீவிரமான விசாரணைக்குப் பிறகு, தியோரியா மாவட்டத்தில் உள்ள சேலம்பூரில் வசிக்கும் ராஜா அன்சாரி என்ற இம்தியாஸ் முகமது அன்சாரி, கிருஷ்ணாநகர் பிரேவேட் காலனியைச் சேர்ந்த சந்தோஷ் சவுகான் மற்றும் தர்மஷாலா ஓல்ட் ஃபல்மண்டியில் வசிக்கும் அங்கித் பாஸ்வான் ஆகிய மூவரும்தான் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் என்பது அடையாளம் காணப்பட்டது.
இதனை அடுத்து கோரக்பூர் விரைவு நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமார், குற்றவாளிகள் மூன்றுபேருக்கும் தலா 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும் தனித்தனியாக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதற்கு முன்னதாக அந்த பெண்ணின் கணவரது குடும்பத்தினர் உதவி வழங்கவும் குடும்பத்தில் அந்த பெண்ணை ஏற்றுக்கொள்ளவும் மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கேரள ஆர்எஸ்எஸ் தலைவரை கொலை வழக்கில் 15 பிஎப்ஐ நபர்களுக்கு மரண தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் அதிரடி!