தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய இந்தியத் தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து! - Election Commissioners of India

New Election Commissioners: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவால், புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ex-bureaucrats-ss-sandhu-gyanesh-kumar-appointed-as-election-commissioners
புதிய இந்திய தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து - பிரதமர் மோடி தலைமையிலான குழு தேர்வு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 3:53 PM IST

டெல்லி:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவால், இன்று (மார்ச் 14) ஓய்வு பெற்ற ஐ.ஏ.ஏஸ் அதிகாரிகளான ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடம் பெற்றுள்ளார். ஆனால், அதிகாரிகள் தேர்வு பட்டியல் தனக்கு முன்பே கிடைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அதிகாரிகள் தேர்வு முறை குறித்து கேள்வி எழுப்பி தனது அதிருப்தியையும் அவர் பதிவு செய்துள்ளார்.

தேர்தல் ஆணையர்கள் தேர்வுக் குழுவில் இந்தியத் தலைமை நீதிபதி இடம் பெற்று இருக்க வேண்டும் என்றும் சட்ட அமைச்சர் தலைமையிலான குழுவில் 200க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் பட்டியலிலிருந்து உத்பல் குமார் சிங், பிரதீப் குமார் திரிபாதி, ஞானேஷ் குமார், இந்தேவர் பாண்டே, சுக்பீர் சிங் சந்து, சுதிர் குமார் கங்காதர் ரஹாதே, முன்னாள் அதிகாரிகள் ஆறு நபர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டார்கள் என்ற தெளிவு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆறு நபர்களில் இருந்து தற்போது தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.ஏஸ் அதிகாரிகளான ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

236 அதிகாரிகளின் பெயர்களைக் கொண்ட ஐந்து பட்டியல் தயார் செய்யப்பட்டதாகவும், அதில் இந்திய அரசாங்கத்தின் செயலாளராகவும், அதற்கு இணையான செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற 92 அதிகாரிகளின் பெயர்கள், இந்திய அரசாங்கத்தின் செயலாளராகவும் அதற்கு இணையான செயலாளராக பணியாற்றி வரும் 93 அதிகாரிகளின் பெயர்கள், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற 15 அதிகாரிகளின் பெயர்கள், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலாளராக பணியாற்றி வரும் 28 அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் 8 அதிகாரிகளின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்று இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:'ஒரே நாடு ஒரே தேர்தல்' குழு அறிக்கை சமர்ப்பிப்பு.. முக்கிய பரிந்துரைகள் என்னென்ன?

ABOUT THE AUTHOR

...view details