தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி மதுபான கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7வது முறை சம்மன்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை 7வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ANI

Published : Feb 22, 2024, 12:56 PM IST

டெல்லி :மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட மதுபான கொள்கை முடிவுகளில் தனியாருக்கு லாபம் ஏற்படும் வகையில் அரசு செயல்பட்டதாகவும் இதனால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா அளித்த புகாரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மேலும், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் டெல்லி அமைச்சர்கள் சத்தியேந்திர ஜெயின், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதைத் தொடர்ந்து, 6 முறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் புறக்கணித்து வந்தார்.

கடைசியாக பிப்ரவரி 14ஆம் தேதி மதுபான ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இருப்பினும் அவர் ஆஜராகாமல் புறக்கணித்தார். அதற்கு முன்னதாக பிப்ரவரி 2ஆம் தேதி, ஜனவரி 18ஆம் தேதி மற்றும் அதற்கு முன்னர் கடந்த ஜனவரி 3, கடந்த நவம்பர் 2 மற்றும் டிசம்பர் 21ஆம் தேதி என அடுத்தடுத்து அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி இருந்தது.

இருப்பினும் தொடர்ச்சியாக அவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில், டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவால் மீது புகார் அளித்தது. இதனிடையே தன் மீதான விசாரணை சட்டவிரோதமானது மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், வரும் பிப்ரவரி 16ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 7வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :வீட்டில் வைத்து பிரசவம்: பரிதாபமாக பறிபோன தாய்-சேய் உயிர்! கேரளாவில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details