ETV Bharat / state

'யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை'.. விஜய் கட்சி குறித்த கேள்விக்கு செந்தில் பாலாஜி சட்டென சொன்ன பதில்..!

விஜய்யின் கட்சிக்கு என்ன வாக்கு வாங்கி இருக்கிறது என்று தெரியவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

செந்தில் பாலாஜி, விஜய்
செந்தில் பாலாஜி, விஜய் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

கோயம்புத்தூர்: கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் சுமார் 10 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும் ஹாக்கி மைதான பணிகளையும், புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிட பணிகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி, '' தமிழகத்தை விளையாட்டு தலைநகராக்கும் வகையில் விளையாட்டு துறை அமைச்சர், முதலமைச்சர் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். கோவையில், ஹாக்கி வீரர்கள் கோரிக்கை ஏற்று ஹாக்கி மைதானம் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. இந்த ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிவித்தார்.

மேலும், கோவையில் 936 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுகிறது. கோவையின் வளர்ச்சிக்கு முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். சாலை பணிகளுக்காக 200 கோடி ரூபாயினை முதல்வர் அறிவித்துள்ளார். பாதாள சாக்கடை பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளார். போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெறும். ஏற்கனவே முதல்வர் சர்வதேச கிரிக்கெட் மைதானம் குறித்து அறிவித்துள்ளார். விரைவில் அதற்கான பணிகளும் துவங்கும் என்றார்.

இதையும் படிங்க: 'TAMILNADU' வார்த்தையில் ழகரம் இல்லை.. அரசுக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு..!

தொடர்ந்து அமைச்சர், 5 வருடத்திற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் சாலை போட்டு இருந்தால், இப்போது சாலை போட வேண்டிய தேவை இல்லை. போன ஆட்சியில் சாலைகள் போடாமல் விட்டதால், இப்போது சாலை பணிகளுக்காக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின்சார வாரியத்தில் கொள்முதல் செய்யப்படக்கூடிய அனைத்து உபகரணங்களும் முறையாக ஆன்லைன் வாயிலாக டெண்டர் விடப்பட்டு வாங்கப்படுகிறது. அதற்கு என அதிகாரிகள் கொண்ட குழு உள்ளது. அவர்கள் விலை பட்டியல் நிர்ணயித்த பின்புதான் எல்லாமே உத்தரவு வழங்கப்பட்டு பொருட்கள் வாங்கப்படுகிறது.

மின்வாரியத்தில் கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றபட்டதோ அந்த நடைமுறைதான் இப்போதும் பின்பற்றபடுகின்றது. அதில்
எந்த விதமான தவறுகளும் நடைபெறவில்லை. இதில் வேறு யார் தலையீடும் இல்லை. உயர் அதிகாரிகள் உள்ள கமிட்டியில் எந்த தவறும் நடக்காது எனக்கூறினார்.

மேலும், நடிகர் விஜய் கட்சி திமுகவிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறதா என்ற கேள்விக்கு? ''அவரது கட்சிக்கு என்ன வாக்கு வங்கி இருக்கிறது என்று தெரியாத சூழல் இருக்கிறது. யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை, குறைவாகவும் சொல்லவில்லை என தெரிவித்த அவர், அரசியல் சார்ந்த கேள்விகளை அரசியல் நிகழ்ச்சிகளில் கேளுங்கள்'' என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியில் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.