ETV Bharat / bharat

மகாயுதியுடன் மோதும் மகா விகாஸ் அகாதி! விறுவிறுக்கும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு! - MAHARASHTRA ASSEMBLY ELECTION

288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு நடந்து வருகிறது. இத்தேர்தலில் மகாயுதி கூட்டணி மற்றும் மகா விகாஸ் அகாதி கூட்டணிகளுக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது.

வாக்குச் சாவடி அதிகாரிகள்
வாக்குச் சாவடி அதிகாரிகள் (credit - ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2024, 10:08 AM IST

மும்பை: 288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்துக்கு இன்று (நவ.20) சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு நடக்கிறது. மொத்தம் 4,136 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 9.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடையும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இத்தேர்தலில் மகாயுதி கூட்டணி மற்றும் மகா விகாஸ் அகாதி கூட்டணிகளுக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது.

மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், சிவசேனா 81 இடங்களிலும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் 101 வேட்பாளர்களையும், சிவசேனா 95 வேட்பாளர்களையும், சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் 86 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சி 237 வேட்பாளர்களையும், மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி 17 வேட்பாளர்களையும் நிறுத்தி தனித்து போட்டியிடுகின்றன.

பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய மகாயுதி நாடாளுமன்ற தேர்தலில் கடும் சரிவை சந்தித்தது. மொத்தம் உள்ள 48 தொகுதி​களில் பாஜக ஒன்பது இடங்களி​லும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஏழு இடங்களிலும் வென்றன. இதனை சரி செய்யவே சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் 'முக்​யமந்திரி மாஜி லட்கி பஹின் யோஜனா' என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர் கொடி தூக்கின.'

இதையும் படிங்க: இந்தியா - இத்தாலி இடையே கூட்டு செயல் திட்டத்தை மேற்கொள்ள முடிவு!

முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா போன்ற முக்கிய தலைவர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் மாநிலம் முழுவதும் தங்கள் வேட்பாளர்களுக்கு வாக்குகளை சேகரித்தனர்.

குறிப்பாக பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் "படேங்கே தோ கதேங்கே" ( பிரிந்திருந்தால் அழிக்​கப்​படு​வோம்) என பேசியது சர்ச்சையை கிளப்பியது. மேலும் பிரதமர் மோடி, "ஏக் ஹை தோ சேஃப் ஹை" (ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்) என்றார். இந்துக்களை ஒண்றிணைக்க சிறுபான்மையினருக்கு எதிராக சொல்லப்பட்ட இந்த கோஷங்களை மகா விகாஸ் அகாதி கூட்டணி கடுமையாக விமர்சித்தன. மேலும், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அஜித் பவாரின் தேசிய​வாதக் காங்கிரஸ் கட்சியும் இதனை ஆதரவிக்கவில்லை. இதனால் கூட்டணிகளுக்குள்ளே சலசலப்பு ஏற்பட்டது.

இதற்கு மத்தியில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 1,00,186 வாக்குச் சாவடிகளில் மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த 2019 மாநில சட்டசபை தேர்தலில் சுயேச்சை உட்பட 3,239 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் இம்முறை 4,136 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 2,086 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர். இன்று ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடந்து முடிந்து நவம்பர் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.