ETV Bharat / bharat

அரிசிக்கு பதிலாக ராகி?அருமருந்தாகும் சிறுதானியங்கள்? அறிவியலாளர் சவுமியா சுவாமிநாதன் அளிக்கும் விளக்கம் - RAGI INSTEAD OF RICE

இந்தியாவில் அனைவருக்கும் உணவு வழங்குவதை உறுதி செய்தாலும் கூட, ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில் இன்னமும் பின்தங்கியிருப்பதாக கூறுகிறார் சவுமியா சுவாமிநாதன்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : Nov 19, 2024, 11:05 AM IST

புவனேஷ்வர்:'ராகி போன்ற சிறுதானியங்களில் க்ளூட்டன் இல்லை, நார்ச்சத்து அதிகமாக உள்ளது, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற சத்துக்களும் உள்ளன' எனவும் 'சிறுதானியங்கள் அரிசிக்கான சரியான மாற்றாக இருக்க முடியும்' என நாடறிந்த அறிவியலாளரான டாக்டர். சவுமியா சுவாமிநாதன் ஒடிசா அரசின் சிறுதானிய தின விழாவில் கூறியுள்ளார். மறக்கப்பட்ட பாரம்பரிய உணவு வகைகளுக்காக நடைபெற்ற 2 நாள் திருவிழாவாக அது அமைந்திருந்தது.

நடைபெற்ற கருத்தரங்கின் நடுவே ஈடிவி பாரத் நிருபரிடம் பேசிய டாக்டர். சவுமியா சுவாமிநாதன், இந்தியாவின் உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி குறித்த பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். பயிர் பன்முகத்தன்மையில் இருக்கும் கட்டுப்பாடுகள், சிறுதானிங்களின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்தும் அவர் பேசினார்.

கேள்வி: ஒடிஷாவின் உணவுப்பழக்கம் உங்களுக்குத் தெரியும். பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதில் சிறுதானியங்களின் பங்கு என்ன?

சவுமியா சுவாமிநாதன்: இந்தியாவின் பாரம்பரியமான உணவுப் பழக்கங்களை பார்த்தோமானால், இதில் பலவகையான உணவுப் பொருட்கள் உள்ளன. இது சமவிகித ஊட்டச்சத்து பெறுவதை உறுதி செய்கின்றன. காலப்போக்கில் நிலையான பயிர்களான, அரிசி, கோதுமை, சோளம் போன்றவை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. இந்த பயிர்கள் அதிகமகசூல் தரும் பயிர்வகை மற்றும் அரசின் ஆதரவு காரணமாக சந்தைகளில் அதிகம் கிடைத்தன. உணவுப்பழக்கத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் பன்மைத் தன்மையை குறைத்து விட்டது. இதன் காரணமாக உடல்பருமன், நீரிழிவு, ஊட்டச்சத்துக்குறைபாடு, அனீமியா போன்ற வாழ்வியல் நோய்கள் அதிகரித்தன. அனைவருக்கும் உணவு என்ற நிலையை அடைந்து விட்டோம். ஆனால் ஊட்டச்சத்து அனைவருக்கும் கிடைப்பதில் இன்னமும் பின்தங்கியுள்ளோம். நுண் ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன் குறைபாட்டுடன் இன்னமும் ஏராளமான மக்கள் உள்ளனர்.

Millet Mission
ஒடிசா அரசு சார்பில் நடைபெற்ற சிறுதானிய திருவிழா (ETV Bharat)

சிறுதானியங்களுக்கு குறைவான தண்ணீர் மற்றும் உரம் தேவைப்படுவதால், இவை இந்தியாவுக்கு மிகவும் உகந்ததாகும். ஊட்டச்சத்து அடிப்படையில் பார்க்கப் போனால், சிறுதானியங்களில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் இன்னபிற அவசிய தேவையான நுண்ஊட்டச்சத்துக்கள் மிகுதியாக உள்ளன. அரிசி சாப்பிடுவதை நிறுத்தத் தேவையில்லை என்றாலும, ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களான சிறுதானியங்களை நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி: கேழ்வரகின் (Ragi) நன்மைகள் என்ன? ஒடிசா போன்ற மாநிலத்தில் இது ஊட்டச்சத்துக்குறைபாட்டை போக்க எப்படி உதவுகிறது?

சவுமியா சுவாமிநாதன்: அரிசியில் கார்போ ஹட்ரேட் அதிகமாக உள்ளது. ஆனால் ராகியில் 7 முதல் 9 சதவீதம் புரதம் உள்ளதால் ஊட்டச்சத்துக்கான நல்ல தேர்வாக உள்ளது. இது மட்டுமின்றி பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, அதில் உள்ள தாதுக்கள் மற்றும் விட்டமின்களை இழந்து விடுகிறது. ஆனால் ராகியில் நுண்ஊட்டச்சத்துக்களான இரும்பு, கால்சியம், ஜிங்க் போன்றவை அப்படியே உள்ளன. இவை இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு அவசியமானதாகும்.

இதையும் படிங்க: மனநலத்தை பாதிக்கும் காற்றுமாசு! காரணம் என்ன?

பொதுவாகவே கார்போ ஹட்ரேட் அதிகம் உண்ணும் பழக்கம் கொண்ட ஒடிஷா மக்கள் தங்கள் உணவில் பழங்கள், காய்கறிகள், இறைச்சி மற்றும் ஆரோக்கியமான கொழுப்பை சேர்த்துக் கொள்ளலாம். புராசஸ் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. தற்போது மக்கள் தங்கள் வருவாயில் 10 சதவீதத்தை இத்தகைய உணவுகளுக்காக செலவிடுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல முயற்சியாக அமையும்.

'Millets can be a perfect replacement for rice'
'சிறுதானியங்கள் அரிசிக்கான சரியான மாற்றாக இருக்க முடியும்' (Credit - ETVBharat)

கேள்வி:அரிசிக்கு பதிலாக ராகியை மாற்றாக பயன்படுத்துவது சாத்தியமா?

சவுமியா சுவாமிநாதன்: ஆம், சிறுதானியங்கள் அரிசிக்கான சரியான மாற்றாக இருக்க முடியும். இந்த கருத்தரங்கில் கூட, அனைத்து உணவுப் பொருட்களிலும் ராகி இருக்கிறது. பாரம்பரியமான உணவுப் பொருட்கள் ராகியினால் செய்யப்பட்டுள்ளன. ராகி போன்ற சிறுதானியங்களில் க்ளூட்டன் இல்லை, நார்ச்சத்து அதிகமாக உள்ளது, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற சத்துக்களும் உள்ளன. இது உங்களின் குடலின் ஆரோக்கியத்துக்கு மிகச்சிறந்ததாகும். அரிசி விளையாத இடங்களில் கூட ராகி விளையும். ஆனாலும், இதனை எப்படி சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். ராகியை மாவாக மாற்றும் போது, இதன் தோலை நீக்காமல் அப்படியே பயன்படுத்துவது இதிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்து பலன்களை அதிகப்படுத்துகிறது. சில சிறுதானியங்களில் ஊட்டப்பொருட்கள் குறைவாக இருந்தாலும் பிற உணவு வகைகளோடு சேர்த்து சாப்பிடுவது நல்ல பலனைக் கொடுக்கும்.

கேள்வி: சிறுதானிய திட்டத்தில் ஒடிசா எந்த அளவுக்கு சாதித்துள்ளது.

சவுமியா சுவாமிநாதன்: இந்தியாவின் சில பகுதிகளான கேரளாவின் குட்டநாடு, ஒடிசாவின் கோரபுட் போன்றவை அரிசி மற்றும் சிறுதானிய உற்பத்தியில் பன்முகத்தன்மைக்காக உலக அரங்கில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. குங்குமப்பூ உற்பத்திக்காக காஷ்மீர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒடிசா அரசு சிறுதானிய உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள், பயறு வகைகள், கிழங்குகள் போன்றவற்றின் உற்பத்தியை ஊக்குவிக்க கவனம் செலுத்தி வருகிறது. தற்போது ஒடிசா அரசு சிறுதானிய பயிரிடுதலை ஊக்குவிப்பது மற்றும் மற்ற பாரம்பரிய உணவுப் பொருட்களை பாதுகாப்பதன் மூலம், உணவு தேர்வில் பன்முகத்தன்மை மற்றும் நிலையான விவசாயம் கொண்ட மாநிலமாக ஒடிசாவை மாற்றுவதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது.

கேள்வி: இன்றைய தேதியில் ஒடிசாவின் விவசாயம் எப்படி இருப்பதாக பார்க்கிறீர்கள்?

சவுமியா சுவாமிநாதன்: ஒடிசாவில் நிறைய வளர்ச்சியை நான் காண்கிறேன். தற்போது நெல்லுக்கு மாற்றுப்பயிராக பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை பயிரிடும் ஒருங்கிணைந்த பயிரிடும் முறையை மேற்கொள்கிறோம். இது மண்ணின் வளத்துக்கு புத்தாக்கம் அளிப்பதோடு, விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்கிறது. மக்கள் தங்கள் உணவில் பச்சைக் காய்கறிகள், கீரைகள் மற்றும் அசைவ புரதங்களை சேர்த்துக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். 30 மாவட்டங்களிலும் ஊட்டச்சத்து மற்றும் பயிர் செய்யும் முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம்.

Mission Millet

சிறுதானிய பயிர்களை பயிர் செய்வதற்கான பயிற்சிக் கூடத்தை தொடங்க முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். ஒடிசா வேளாண் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக் கழகம் மூலமாக இது நடைபெறும். இதன் மூலம் விவசாயிகள் சிறுதானிய உற்பத்திக்கான சிறந்த நடைமுறைகளை கற்றுத் தெரிந்து கொள்வார்கள்.

கேள்வி: சிறுதானியங்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை (MSP) நிர்ணயம் செய்வது எந்த அளவுக்கு அவசியமானது என நினைக்கிறீர்கள்?

சவுமியா சுவாமிநாதன்: எம்.எஸ்.பி. மிகவும் முக்கியமானது. ராகிக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூ. 4,000 என நிர்ணயித்து ஒடிசா ஒரு முன்னெடுப்பை (Shri Anna Abhiyan) மேற்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு குறிப்பிடத் தகுந்த பணச்சலுகைகளை வழங்கும் இந்த திட்டத்தை மற்ற மாநிலங்களும் முன்னெடுக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை இருப்பதால் சந்தை விலையும் உயரும், இத்தகைய ஊட்ட உணவுகளுக்கான தேவையும் அதிகரிக்கும்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் உடலில் பாதிப்பா? மூத்த விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் சொன்ன முக்கிய தகவல்!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.