ETV Bharat / state

"மாமன்னன் தான் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம்" - உறுதி செய்த உயர் நீதிமன்றம்! - MADRAS HIGH COURT

இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த ஓ.எஸ்.டி பிலிம்ஸ் நிறுவனத்தின் வழக்கை தள்ளுபடி செய்ததன் மூலம், 'மாமன்னன்' தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது.

மாமன்னன் போஸ்டர், சென்னை உயர்நீதிமன்றம்
மாமன்னன் போஸ்டர், சென்னை உயர்நீதிமன்றம் (Credits- Mari Selvaraj X page, ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2024, 2:15 PM IST

சென்னை: இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த ஓ.எஸ்.டி பிலிம்ஸ் நிறுவனத்தின் வழக்கை தள்ளுபடி செய்ததன் மூலம், 'மாமன்னன்' தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது.

ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், "உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் 'ஏஞ்சல்' என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு, 2018ஆம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியதாகவும், 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது," என கூறியிருந்தார்.

மேலும், "தற்போது, 20 சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் நடித்துள்ள உதயநிதி, அந்த படமே தனது கடைசி படம் என கூறியுள்ளார். ஏஞ்சல் படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், ஒப்பந்தப்படி இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால், ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டுமெனவும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.25 கோடி இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும்" என்றும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இதையும் படிங்க: எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அந்த வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் சார்பில் தாக்கல் செய்யப்படிருந்த மனுவில், "மிகவும் காலதாமதமாக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தெளிவில்லாத மனு, எனவே இந்த மனுவை நிராகரிக்க வேண்டும்,"எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதி டீக்காரமன் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் உதயநிதியின் நிராகரிக்கக் கோரிய மனுவை ஏற்றுக்கொண்டு, ஓ.எஸ்.டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் மாமன்னன் என்பதையும் சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.