அம்ரேலி/குஜராத்: குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சாவர் குண்ட்லா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று (அக்டோபர் 27) மாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. மாலை 5.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். மிதியாலா, தஜாடி, சாவர் குண்ட்லா உள்ளிட்ட கிராமங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அம்ரேலியில் உள்ள கம்பாவில் உள்ள தடானியா கிராமத்தில் ரத்தின தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள், நிலநடுக்கத்தால் அங்கும் இங்கும் ஓடும் காணொளி வைரலாகி வருகிறது. இந்த காணொளியில் ரத்தினக் கலைஞர்கள் நிலநடுக்கத்திற்கு பயந்து அங்கும் இங்கும் ஓடுவதை காணலாம். இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.