புதுடெல்லி:தீபாவளி மற்றும் சாத பண்டிகைகளை முன்னிட்டு இந்த ஆண்டு நாடு முழுவதும் மொத்தம் 7,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணய் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மொத்தம் 4,429 சிறப்பு பயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த இவற்றின் எண்ணிக்கை 7,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அமைச்சர், இவற்றின் மூலம் நாள்தோறும் சுமார் 2 லட்சம் பயணிகள் கூடுதலாக பயணிக்க இயலும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி நாள்தோறும் 136 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும், சாத் பூஜைக்காக நவம்பர் 2,3 மற்றும் 4 ஆம் தேதிகளில் 145 கூடுதல் ரயில்களும் இயக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார், பண்டிகைக் காலங்களில் பயணிகள் சுலபமாக பயணம் மேற்கொள்ளும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதை அடுத்து, பல்வேறு ரயில் நிலையங்களில் கூடுதல் பயணச்சீட்டுகள் வழங்கும் அறை, உணவகம், தண்ணீர் வசதி, பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.