டெல்லி :மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது மற்றும் விசாரணை நீதிமன்றம் அனுமதித்த காவல் ஆகியவற்றை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு எதிரான கைது நடவடிக்கை மற்றும் அமலாக்கத்துறையின் காவலை எதிர்த்து இடைக்கால நிவாரணம் கோரி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச்.27ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது. மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்களுக்கு பதிலளிக்கக் கோரி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, ஏப்ரல் 3ஆம் தேதி வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஒத்திவைத்தார்.
இன்று மீண்டும் வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க :பாஜகவில் இணைந்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்! காங்கிரசில் இருந்து விலகியதற்கு கூறிய காரணம் என்ன? - Boxer Vijender Singh Joins BJP