தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக வென்றால் பெண்களுக்கு மாதம் ரூ.2500...டெல்லி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி! - DELHI ELECTIONS 2025

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக தலைவர் ஜேபி நட்டா வெளியிட்டார். பாஜக வெற்றி பெற்றால் ஆம் ஆத்மி அரசின் நலத்திட்டங்கள் தொடரும் என்று நட்டா உறுதி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான ஜே.பி.நட்டா
மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான ஜே.பி.நட்டா (Image credits-X/BJP)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2025, 7:31 PM IST

புதுடெல்லி:டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் ரூ.2500 உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டெல்லியில் மொத்த வாக்காளர்கள் 1.55 கோடி பேராக உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 83.5 லட்சம் பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 73.7 லட்சமாக உள்ளது. டெல்லியில் 13,033 வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

வேட்பு மனுதாக்கல் இன்று நிறைவு பெற்றது. வேட்பு மனுக்கள் மீதான ஆய்வு நாளை நடைபெறுகிறது. வேட்புனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஜனவரி 20ஆம் தேதியாகும். அதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று மதியத்துக்குள் முடிவுகள் வெளியாகும்.

தேர்தல் களத்தில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பல மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணிகளை அந்த கட்சி தொடங்கி விட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதையும் படிங்க:ஈரோடு கிழக்கு மனு தாக்கல் நிறைவு - திமுக, நாதக வேட்புமனு தாக்கல்!

இந்த நிலையில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை சங்கல்ப் பத்ரா-1 என்ற தலைப்பில் டெல்லி பாஜக அலுவலகத்தில் அதன் தலைவர் ஜேபி நட்டா வெளியிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் முதியோருக்கான ஓய்வூதியத் தொகை உயர்த்தி வழங்கப்படும். ஏழை பெண்களுக்கு ரூ.500 மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். பெண்களுக்கு 6 நுண்ணூட்ட சத்து பெட்டகங்கள், கர்பிணி பெண்களுக்கு ரூ.21,000 நிதி உதவி ஆகியவை வழங்கப்படும்.

டெல்லியின் வளர்ச்சிக்கான சங்கல்ப் பத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் 500 வாக்குறுதிகளை அளித்தோம். அதில் 499ஐ நிறைவேற்றினோம். 2019ஆம் ஆண்டு 235 வாக்குறுதிகள் அளித்தோம். 225 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். மீதம் உள்ள வாக்குறுதிகளின் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆம் ஆத்மி கட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைகேடுகளை முடிவுக்கு கொண்டு வருவோம். எங்கள் ஆட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பெண்கள் பொருளாதார ரீதியாக வலிமை பெற பாஜக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது,"என்றார்.

ABOUT THE AUTHOR

...view details