டெல்லி:டெல்லி இந்தர்லோகில் மசூதி அருகே சாலையோரத்தில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை காலால் எட்டி உதைத்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி இந்தர்லோகில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழப்படும் 'ஜும்மா' எனும் சிறப்பு தொழுகைக்கு ஏராளமானோர் இஸ்லாமியர்கள் கூடிய நிலையில், மசூதிக்குள் போதிய இட வசதி இல்லாமல் நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக சிலர் மசூதிக்கு வெளியே, அதாவது சாலையில் ஓரத்தில் தொழுது கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் சாலையின் ஓரமாக தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்கள் சிலரை மனிதநேயமற்ற முறையில் காலால் எட்டி உதைத்துள்ளார். போலீசாரின் இந்த செயல் அங்கிருந்தவர்கள் கோபம் அடையச் செய்தது. உடனடியாக அவர்கள் போலீசாரை சூழ்ந்து கொண்டு அவரது செயல்களுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பலரும் இது குறித்து தங்களது கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி இம்ரான் பிரதாப்கார்கி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "தொழுகையில் ஈடுபட்டிருப்பவர்களை டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் எட்டி உதைப்பது, மனிதநேயத்தின் அடிப்படை புரிதல் இல்லாததை காட்டுகிறது.