தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட இளைஞர் தகனம் செய்யும்போது உயிர் பிழைத்தார்...ராஜஸ்தான் மருத்துவர்கள் மூவர் சஸ்பெண்ட்! - DECLARED DEAD

இறந்து விட்டார் என மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட நபர், தகனமேடையில் இருந்து உயிரோடு எழுந்து வந்த அதிசயம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.

பிடிகே அரசு மருத்துவமனை
பிடிகே அரசு மருத்துவமனை (Image credits-Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2024, 10:40 AM IST

ஜுன்ஜுனு(ராஜஸ்தான்): இறந்து விட்டார் என மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட நபர், தகனமேடையில் இருந்து உயிரோடு எழுந்து வந்த அதிசயம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. எனினும் மீண்டும் மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லும்போது அந்த நபர் இறந்து விட்டார்.

ரோஹிதாஷ் குமார் என்ற 25 வயது இளைஞர் காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்று திறனாளி. உடல் நலக்குறைவு காரணமாக உள்ளூரில் உள்ள பிடிகே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 21ஆம் தேதி மதியம் இரண்டு மணிக்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக உறவினர்களிடம் கூறினர். இதனையடுத்து அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டது.

இதன் பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து காவல்துறையினர் உதவியுடன் தகனம் செய்வதற்காக ரோஹிதாஷ் குமார் உடல் ஆம்புலன்சில் எடுத்து செல்லப்பட்டது. தகன மேடையில் அவரது உடல் வைக்கப்பட்டதும், அவர் சுவாசிப்பது தெரியவந்தது. அங்கிருந்த உறவினர்கள், நண்பர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையும் படிங்க :"அரசு மருத்துவமனைகளில் அதிகமான நுழைவாயில்கள் இருப்பதால் பாதுகாப்பு குறைபாடு"-அமைச்சர் மா சுப்பிரமணியன் புதிய விளக்கம்!

தகனம் செய்யும் இடத்தில் இருந்த உறவினர் ஒருவர் இது குறித்து பேசுகையில், தகனமேடையில் வைக்கப்பட்ட ரோஹிதாஷ் குமார் உடலில் அசைவு தெரிந்தது. எனவே, அவர் உயிரோடு இருக்கிறார் என்பதை உணர்ந்தோம்,"என்றார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் உடல் நிலை மிகவும் கவலைக்குரியதாகவே இருந்தது. ஆனால், உயிரோடு இருந்தார். பின்னர் 22ஆம் தேதி காலை மேல் சிகிச்சைக்காக ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரோஹிதாஷ் குமார் உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் ராமாவதார் மீனா, இந்த நிகழ்வு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் தீவிரமான அலட்சிய போக்காகும். இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்களின் பணி சூழல் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும்," என்றார். இதன் தொடர்ச்சியாக அரசு மருத்துவமனையில் மூன்று மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details