தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு - சட்டப்பேரவையில் தீர்மானம் தாக்கல்! - தெலங்கானா சட்டப்பேரவை கூட்டம்

Telangana Caste census: தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதிக்கக் கோரிய தீர்மானம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 5:18 PM IST

ஐதராபாத் :தெலங்கானா சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய கூட்டத்தில் மாநில பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் பூனம் பிரபாகர் சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார். முன்னதாக கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில், மாநிலத்தில் சமூக, பொருளாதார, கல்வி அடிப்படையிலான, வேலைவாய்ப்பு, அரசியல் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு வீடு வீடாக சென்று நடத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார, வேலைவாய்ப்பு, மற்றும அரசியல் வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :இஸ்ரோவின் இன்சாட் செயற்கைக்கோள் விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கியது!

ABOUT THE AUTHOR

...view details