சர்குஜா :ராகுல் காந்தியின் ஆலோசகரும் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவருமான சாம் பித்ரோடாவின் கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர், அமெரிக்காவில் பரம்பரை வரி சட்டம் இருப்பதாகவும், ஒருவர் 100 மில்லியன் டாலர் சம்பாதிக்கும் போது அதில் 45 சதவீதத்தை மட்டுமே தனது குழந்தைகளுக்கு வழங்க முடியும் மீதமுள்ள 55 சதவீத்த்தை அரசு எடுத்துக் கொள்ளும் என்று தெரிவித்தார்.
இந்தியாவில் அதுபோன்ற சட்டங்கள் இல்லை என்றும் காங்கிரஸ் ஆட்சியில் சொத்து மறுபங்கீட்டுகான தனிப்பட்ட சிறந்த கொள்கை கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். தற்போது இந்த கருத்து சர்ச்சைய ஏற்படுத்தி உள்ளது. சாம் பித்ரோடாவின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், சத்தீஸ்கரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, நாட்டு மக்கள் தங்களது சம்பாதியத்தில் சேர்க்கும் சொத்துகளை தங்களது குழந்தைகளிடம் வழங்குவதை காங்கிரஸ் விரும்பவில்லை என்று தெரிவித்து உள்ளார். அரசு குடும்பத்தின் இளவரசரின் ஆலோசகர் நடுத்தர குடும்ப மக்கள் மீது அதிக வரிகளை விதிக்கப்பட உள்ளதை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததாக பிரதமர் கூறினார்.
தற்போது காங்கிரஸ் ஒருபடி மேலே சென்று, பரம்பரை வரி விதிக்கப் போவதாகச் சொல்வதாகவும், பெற்றோரிடமிருந்து பெற்ற பரம்பரை சொத்துகளுக்கும் காங்கிரஸ் வரி விதிக்கப் போகிறது என்றார். மேலும், உங்களின் கடின உழைப்பால் நீங்கள் சேர்த்த சொத்து உங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படாது என்று பிரதமர் கூறினார்.
வாழ்நாள் முழுவது அதற்கு பின்னரும் கொள்ளை அடிப்பதே காங்கிரஸ் கட்சியின் தாரக மந்திரம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி நீங்கள் உயிருடன் இருக்கும் வரை அதிக வரிகளை விதிக்கும், நீங்கள் உயிருடன் இல்லாத போது, அது உங்களுக்கு பரம்பரை வரியை விதிக்கும் என்றார்.
ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையும் தங்களின் தேசமாக கருதியவர்கள், தங்களது சொத்தை தங்கள் பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர். தற்போது இந்தியர்கள் தங்கள் சொத்தை தங்கள் குழந்தைகளுக்கு வழங்குவதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை என்று பிரதமர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியான போதே அது முஸ்லிம் லீக் கொள்கைகளை பிரதிபலிப்பது போல் இருப்பதாக தான் கூறியதாகவும் இந்த அரசியலமைப்பு கட்டமைக்கப்பட்ட போது அதை உருவாக்கிய பாபா சாஹேப் அம்பேத்கர் மத ரீதியிலன இட ஒதுக்கீட்டை இந்தியாவில் வழங்க திட்டமிடவில்லை என்றும் ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக தலை சிறந்த மனிதர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்பை திருத்த காங்கிரஸ் திட்டமிடுவதாக பிரதமர் மோடி கூறினார்.
ஆந்திராவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க பல ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் முயற்சித்ததாகவும் பின்னர் அதை நாடு முழுவதும் செயல்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டது என்றார். அதன் மூலம் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இடஒதுக்கீட்டில் சில பகுதியை திருடி மதத்தின் அடிப்படையில் சிலருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் திட்டமிட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க :பரம்பரை வரியை கொண்டு வர காங்கிரஸ் திட்டமா? சாம் பித்ரோடாவின் சர்ச்சை கருத்து கூறுவது என்ன? பாஜக விளாச காரணம் என்ன? - Sam Pitroda