டெல்லி :மக்களவை தேர்தலை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. தேர்தல் அறிக்கையில் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டமான உபா, பண மோசடி தடுப்பு சட்டம் ஆகிய கடுமையான சட்டப் பிரிவுகள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதத்தில் இருந்து அரசியலை பிரிப்பது போன்ற கொள்கையை சமரசம் இல்லாமல் கடைபிடிப்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளன. கடுமையான சட்டங்களான உபா மற்றும பணம் மோசடி தடுப்பு சட்டங்களை ரத்து செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெறுப்பு பிரசார குற்றங்களுக்கு எதிரான சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், பெரும் பணக்காரர்களுக்கு வரி விதிக்கவும், பொது சொத்து வரி மற்றும் பரம்பரை வரி குறித்த சட்டத்தை அறிமுகப்படுத்துவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்து உள்ளது.