தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

“ராகுல் காந்தி தைத்த காலணியை பிரேம் செய்து வைப்பேன்”.. உ.பி. தொழிலாளி சுவாரஸ்ய பகிர்வு! - rahul gandhi - RAHUL GANDHI

Slippers Stitched By Rahul Gandhi: உத்தரப்பிரதேசம் சுல்தான்பூரில் ராகுல் காந்தி தைத்த காலணிகளை கோடி ரூபாய் கொடுத்தாலும் தரமாட்டேன் என காலணி தைக்கும் தொழிலாளி தெரிவித்துள்ளார்.

தொழிலாளியிடம் உரையாடிய ராகுல் காந்தி
தொழிலாளியிடம் உரையாடிய ராகுல் காந்தி (Credits - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 2:57 PM IST

சுல்தான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள சுல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்ற அவதூறு வழக்கு ஒன்றில் ஆஜராகுவதற்காக கடந்த மாதம் 26ஆம் தேதி ராகுல் காந்தி சென்றிருந்தார். அப்போது சுல்தான்பூர் நீதிமன்றத்திற்கு வெளியே காலணி தைக்கும் தொழில் செய்துவரும் ராம்சேட் என்ற தொழிலாளியைச் சந்தித்து நலம் விசாரித்து, தொழிலாளி அன்றாடம் சந்திக்கும் சவால்கள் குறித்து உரையாடினார்.

மேலும், காலணிகளைத் தைப்பது தொடர்பாகவும் ராகுல் காந்தி கேட்டு அறிந்தார். பின்னர் மறுநாள் காலணி தைக்கும் தொழிலாளி ராம்செட்டுக்கு ராகுல் காந்தி புதிய தையல் இயந்திரத்தைப் பரிசாக அனுப்பி வைத்து, அத்துடன் இரண்டு ஜோடி காலணிகளையும் அனுப்பினார். இதன்பின் ராம்சேட் அப்பகுதி மக்களிடையே பிரபலமானார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி தைத்த காலணியை வாங்குவதற்காக பலரும் ராம்சேட்டை அணுகுவதாகக் சொல்லப்படுகிறது. இதுகுறித்து ராம்சேட் கூறியதாவது, ராகுல் காந்தி எனது கடைக்கு வந்தது கடவுளே வந்தது போல் இருந்ததாகவும், தான் எவ்வாறு காலணிகளைத் தைக்கிறேன் என்பதை அவர் என்னிடம் கேட்டு அறிந்ததாகக் கூறினார். நான் அவருக்கு காலணியைத் தைத்துக்காட்டினேன் என்றும், பின்னர் அவர் நான் அளித்த குளிர்பானத்தைப் பகிர்ந்து கொண்டதாக பெருமிதம் கொண்டார்.

தான் கடந்த 40 வருடங்களாக காலணி தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், ராகுல் காந்தி என் கடைக்கு வந்த தருணத்தில் இருந்து என் வாழ்வே மாறிவிட்டதாக கூறினார். மேலும், அவர் கொடுத்த தையல் இயந்திரம் தனக்குப் பெரிதும் உதவியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

ராகுல் காந்தி தைத்துக் கொடுத்த காலணியைக் கேட்டு பலபேர் தன்னை அணுகியதாகவும், தான் அதை மறுத்துவிட்டதாகத் தெரிவித்தார். அந்த காலணிகளை காலணி உரிமையாளர் கேட்டாலும் கொடுக்க மாட்டேன் என்றும், அவர் கேட்டால் அந்த காலணிக்கு உண்டான விலையைக் கொடுத்துவிடுவேன் என்றும் தெரிவித்தார். மேலும், அந்த காலணிகளை நான் உயிருடன் இருக்கும் வரை ப்ரேம் செய்து வீட்டுச்சுவரில் மாட்டிக் கொள்வேன் எனக் கூறினார்.

இதிலும் இந்த காலணிகளுக்கு ரூ.10 லட்சம் வரை தருவதாகச் சொல்லி காலணிகளை பலபேர் கேட்ட போதிலும், 10 லட்சம் ரூபாய் இல்லை, எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் அந்த காலணிகளைக் கொடுக்க மாட்டேன் எனக்கூறிவிட்டேன்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பெண்கள் கண்ணியத்திற்கு கேடு; பிரச்சார பேச்சால் ராகுல் காந்திக்கு வந்த சோதனை.. கர்நாடகா கோர்ட்டில் மனு!

ABOUT THE AUTHOR

...view details