தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் மலர்கண்காட்சி தொடங்கியது - ஒரு லட்சம் மரக்கன்றுகள் விற்பனை செய்ய இலக்கு! - ரங்கசாமி

Puducherry Chief Minister: புதுச்சேரியில் இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் ஒரு லட்சம் செடி, மரக்கன்றுகள் விற்பனை செய்ய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Puducherry flower show
புதுச்சேரி மலர்கண்காட்சி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2024, 10:02 AM IST

புதுச்சேரி மலர்கண்காட்சி

புதுச்சேரி:புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், வேளாண் விழா எனும் 34வது மலர், காய், கனி கண்காட்சி இன்று முதல் 11ஆம் தேதி வரை தாவரவியல் பூங்காவில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலையைச் சார்ந்த நிறுவனங்கள், தங்களின் புதிய கண்டுபிடிப்புகள், விதைகள், உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு முறைகள், இயந்திரங்கள், புதிய திட்டங்கள், நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை அரங்குகளாக அமைத்து காட்சிப்படுத்தி உள்ளன.

இந்த விழாவின் ஒரு பகுதியாக கொய் மலர்கள், தொட்டி வளர்ப்பு, மலர் அலங்காரம், காய்கறிகள், பழ வகைகள், தென்னை, மூலிகைச் செடிகள், பழத் தோட்டங்கள், காய்கறி சாகுபடி வயல்கள், அலங்காரத் தோட்டம், மாடித் தோட்டம், வீட்டு காய்கறி தோட்டம் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டன.

இதனிடையே, ரங்கோலி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. மேலும், மானிய விலையில் உயர் ரக நடவுக் கன்றுகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த விழாவில், தனியார் நிறுவனங்களின் விற்பனை நிலையங்கள், உணவகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விழாவில் பொதுமக்களுக்காக மலர் படுக்கை மற்றும் புல் வளாகத்தில் மலர்களின் அணிவகுப்பு, பாரத மாதா சிலை, இசை நடன நீரூற்று, சிறுவர் உல்லாச ரயில் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும், பல்வேறு வேளாண் மற்றும் தோட்டக்கலை உபகரணங்கள், பழம் மற்றும் காய்கறி நாற்றுகள், உரங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில், காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், காரைக்கால் பகுதிக்கு ஏற்ப உருவாக்கியுள்ள KKL (R) 2 என்ற நெல் ரகம் வெளியிடப்பட்டது. மேலும், ஒரு லட்சம் செடி மரக்கன்றுகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோயம்புத்தூர் மாவட்டத்தில் 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை..!

ABOUT THE AUTHOR

...view details