தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எல்லையில் இந்தியா-சீனா படைகள் வாபஸ் பெறும் நடவடிக்கைகள் எப்போது முடிவடையும்? - TROOP PULLBACKS

இந்தியா, சீனா இருதரப்பிலும் டெம்சோக் மற்றும் டெப்சாங் பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெறும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. படைகளை வாபஸ் பெறுவது அக்டோபர் 28 அல்லது 29ஆம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

எல்லையில் இந்திய ராணுவம், சீன ராணுவம்
எல்லையில் இந்திய ராணுவம், சீன ராணுவம் (Image credits-PTI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2024, 1:01 PM IST

பெய்ஜிங்: இருநாடுகளும் ஒப்புக் கொண்டபடி எல்லையில் இந்தியா-சீனா படைகளை வாபஸ் பெறும் பணிகள் இலகுவாக நடைபெற்று வருகிறது.

காஷ்மீரின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய எல்லையில் அத்துமீறி சீனா தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. எனவே கல்வான் பள்ளதாக்கை ஒட்டியிருக்கும் டெம்சோக் மற்றும் டெப்சாங் பகுதியில் இருநாடுகளும் படைகளை குவிக்கத் தொடங்கின.

தூதரக ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இருதரப்புக்கும் இடையே பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் விக்ரம் மிஸ்ரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து இந்தியாவும் சீனாவும் படைகளை விலக்கிக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதனை சீனாவும் உறுதி செய்தது.

இதையும் படிங்க :பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே நடந்த சந்திப்பு:சீன அதிபரிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியது என்ன?

மேலும், ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்க் இருவரும் படைகளை விலக்கிக் கொள்ளும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதை உறுதிப்படுத்தினர். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் லின் ஜியான்,"எல்லைப் பகுதியில் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து இந்தியா-சீனா இடையே அண்மையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு ஏற்றபடி இருநாட்டு ராணுவங்களும் படைகளை விலக்கிக் கொள்ளும் பணியில் ஈடுபட்டுளனர். இந்த தருணத்தில் இந்த பணி இலகுவாக நடைபெற்று வருகிறது,"என கூறினார்.

இந்தியா-சீனா இடையேயான ஒப்பந்தத்தின்படி வரும் 28 அல்லது 29ஆம் தேதிக்குள் எல்லையில் இருநாட்டு ராணுவங்களும் படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ளும் என்று இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் பிறபகுதிகளில் சீனாவின் அத்துமீறல் குறித்து இருநாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன என்றும் ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details