கொல்கத்தா:மேற்கு வங் மாநிலத் தலைநகர், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இக்கொலை சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.. இவ்வழக்கின் நிலை அறிக்கையை சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் கடந்த 9 ஆம் தேதி தாக்கல் செய்தது.
இந்த நிலையில், இவ்வழக்கில் முக்கிய திருப்பமாக, ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய கண்காணிப்பாளர் அபிஜித் மோன்டல் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்தனர். பயிற்சி பெண் மருத்துவர் கொலையின் தடயங்களை அழிக்க முயற்சித்தது, இச்சம்பவம் குறித்து காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.இதேபோன்று, இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிய தாமதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அபிஜித் மோன்டல் கைதாகி உள்ளார் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, பயிற்சி பெண் மருத்துவருக்கு நேர்ந்த அநீதிக்கு நீதி கேட்டு போராடிவரும் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இளநிலை மருத்துவர்கள் சந்தீப் கோஷ், அபிஜித் மோன்டல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க:என்ன கொடுமை சார் இது!.."ஒரு டீயின் விலை 340 ரூபாயா?" - ப.சிதம்பரம் ட்வீட்!