தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"வெள்ளி பதக்கம் வேண்டும்" - வினேஷ் போகத் மேல்முறையீடு மனு மீது நாளை தீர்ப்பு! - Vinesh phogat appeal pettion - VINESH PHOGAT APPEAL PETTION

Vinesh phogat: வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், இதற்கான தீர்ப்பு பாரீஸ் நேரப்படி நாளை மாலை 6 மணிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Vinesh phogat
Vinesh phogat (Credits - IANS)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 10:09 PM IST

பாரீஸ்:பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்து இருந்த வினேஷ் போகத் (Vinesh Phogat) நிர்ணயிக்கப்பட்டத்தை விட 100 கிராம் கூடுதல் எடையுடன் இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ஒலிம்பிக் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் (court of arbitration for sports) மேல் முறையீடு செய்தார் வினோஷ் போகத். மேலும், தனக்கு வெள்ளிப்பதக்கம் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என எதிர்ப்பார்த்த நிலையில், பாரீஸ் நேரப்படி ஒலிம்பிக் போட்டி நிறைவடைவதற்கு முன் நாளை மாலை 6 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:வினேஷ் போகத்திற்கு வெள்ளி பதக்கம்? நடுவர் நீதிமன்றம் கூறுவது என்ன? - paris Olympics 2024

ABOUT THE AUTHOR

...view details