பாட்னா:பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான், இமாச்சல பிரதேசம் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
இந்நிலையில், டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் கலந்து கொள்ளப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிதிஷ் குமாருக்கு பதிலாக துணை முதலமைச்சர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிதி ஆயோக் கூட்டத்தில் நிதிஷ் குமார் என்ன காரணத்திற்காக கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம், நிதி ஆயோக் கூட்டத்தை நிதிஷ் குமார் புறக்கணிப்பது ஒன்றும் புதிதல்ல என்று கூறப்படுகிறது. இதற்கு முன் நடந்த கூட்டங்களில் கூட முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்து கொள்ளவில்லை என்றும் பீகார் பிரதிநிதியாக அப்போதைய துணை முதலமைச்சர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த முறையும் இரண்டு துணை முதலமைச்சர்ர்களும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக ஐக்கிய ஜனதா தள செய்தி தொடர்பாளர் நீரஜ் குமார் தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர்கள் இருவரை தவிர்த்து பீகாரை சேர்ந்த நான்கு மத்திய அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அதேபோல் பாஜக கூட்டணியில் உள்ள புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:திருட வந்த இடத்தில் குடித்த தண்ணீருக்கு பணம் வைத்த கொள்ளையன்! சிசிடிவி முன் கூறியது என்ன? - Telangana Hotel Theft viral video