சென்னை: பிக்பாஸ் வீட்டில் கடந்த வார எவிக்ஷனில் நடிகர் ரஞ்சித் வெளியேறினார். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் சீசன் அவ்வப்போது விறுவிறுப்பாக செல்லும் நிலையில், சில சமயம் எந்த வித சுவாரஸ்யமும் இல்லாமல் நகர்வதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 7 சீசனாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். முன்னதாக எவிக்ஷனில் தர்ஷிகா வெளியேறினார். அதனைத்தொடர்ந்து பிக்பாஸ் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த வாரம் செங்கல் டாஸ்க் வைக்கப்பட்டது. இதில் சிறந்த போட்டியாளர்களை பிக்பாஸ் தேர்வு செய்து கூற சொன்னார்.
அதில் சிறந்த போட்டியாளர்களாக முத்துக்குமரன், ஜெஃப்ரி, பவித்ரா ஆகியோரை மற்ற போட்டியாளர்கள் தேர்வு செய்தனர். சிறப்பாக விளையாடாத போட்டியாளராக சவுந்தர்யா, அன்ஷிதா ஆகியோரை தேர்வு செய்தனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கடந்த வார இறுதியில் இரண்டு எவிக்ஷன் என கூறப்பட்டது. ஆனால் நடந்த ஒரு எவிக்ஷனில் நடிகர் ரஞ்சித் மட்டும் வெளியேறினார்.
ஆரம்பம் முதல் பெரிய அளவில் எந்த வித சண்டைகளில் சிக்காமல் வீட்டில் அமைதியான போட்டியாளராகவே ரஞ்சித் இருந்தார். ரஞ்சித் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த போது இவர் அதிகமாக பிரச்சனை செய்யக்கூடிய போட்டியாளராக இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரஞ்சித் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அறிகுறியே தெரியாமல் அமைதியாக இருந்து விட்டு சென்றுள்ளார்.
Sweet Surprise for #Ranjith 💥💥#VJS fun 😅😅#BiggBossTamil | #BiggBossTamil8 | #BBTamil | #BBTamil8 | #FlickVillage | #BiggBoss8Tamil | #BB8Tamilpic.twitter.com/5MFOGXOltT
— FlickVillage (@flickvillage) December 22, 2024
இதையும் படிங்க: "விஜய் நடித்துக் கொண்டே அரசியல் செய்யலாம்" - நடிகர் நடராஜ் விருப்பம்! - ACTOR NATARAJ IN COIMBATORE
இந்நிலையில் ரஞ்சித் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் அவரது மனைவி பிரியா ராமன் நிகழ்ச்சிக்கு வந்து அவருக்கு சர்ப்ரைஸ் அளித்தார். நடிகர் ரஞ்சித் மனைவி பிரியா ராமன் வள்ளி, சூர்யவம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரஞ்சித், பிரியா ராமன் இருவருக்கும் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு விவாகரத்து ஆன நிலையில், பிறகு மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.