மும்பை: மும்பை விமான நிலையத்திலிருந்து மொரிஷியஸ்க்கு அதிகாலை 4.30 மணிக்குச் செல்ல வேண்டிய ஏர் மொரிஷியஸ் எம்.கே 749 ரக விமானம் (Air Mauritius flight MK 749) இயந்திரக் கோளாறு காரணமாகப் பயணிகளுடன் மும்பை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக விமானம் புறப்படவில்லை.
இதுகுறித்து பயணி ஒருவர் கூறும்போது,"ஏர் மொரிஷியஸ் விமானம் அதிகாலை 4.30 மணிக்குக் கிளம்புவதால், பயணிகள் 3.45 மணிக்கு விமானம் உள்ளே ஏறினர். திடீரென இயந்திரக்கோளாறு காரணமாக விமானம் புறப்படாததால், விமானத்தின் உள்ளே பயணிகள் இருந்தனர். வெளியே செல்ல அனுமதிக்கப்பட வில்லை. மேலும், விமானத்தில் ஏசி வேலை செய்யவில்லை என்பதால் பயணிகள் அனைவரும் கடும் அவதிப்பட்டனர்.