பெங்களூரு :2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் உள்ளிட்டோர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே 5 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
Swasthya Adhikar: ஆரோக்கியத்திற்கான உரிமைச் சட்டம். அனைவருக்கும் இலவச மருந்துகள், சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை உள்பட பல்வேறு சிகிச்சைகள் வழங்குதல்.
Shram ka Samman: ஒரு நாளைக்கு குறைந்தபட்ச ஊதியமாக 400 ரூபாயாக நிர்ணயிப்பது. தேசிய அளவில் அனைத்து மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக 400 ரூபாய் நிர்ணயிப்பது.