உத்தரப் பிரதேசம்:உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நாளை (ஜன.21) நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பிரபலங்கள், தனியார் துறை வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி சென்றடைந்தார்.
ராமர் கோயில் விழாவில் பங்கேற்க அயோத்தி சென்றடைந்தார் நடிகர் ரஜினிகாந்த்! - உத்தரப் பிரதேசம்
Actor Rajinikanth in Ayodhya: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க, இன்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி சென்றடைந்தார்.
Published : Jan 21, 2024, 7:38 PM IST
சில நாட்களுக்கு முன் அயோத்தி ராமர் கோயில் நிர்வாகிகள், கும்பாபிஷேக விழா அழைப்பிதழை நடிகர் ரஜினியிடம் நேரில் சென்று வழங்கி இருந்தனர். இதையடுத்து விழாவில் பங்கேற்க அவரது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், லக்னோ விமான நிலையம் சென்றடைந்தார். அவர் அயோத்தியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து நாளை விழாவில் பங்கேற்க உள்ளார்.
மேலும், நடிகர் தனுஷும் அயோத்தி சென்றுள்ளார். மேலும், கங்கனா ரனாவத், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோரும் நாளைய நிகழ்வில் பங்கேற்பதற்காக அயோத்தியில் உள்ளனர்.