டெல்லி: பஞ்சாப்பின் மேற்கு ஜலந்தர் தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மொகிந்தர் பகத் வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஷீத்தல் அங்குரலை விட 37 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று மொகிந்தர் பகத் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதேபோல் இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். இதில் தேஹ்ரா தொகுதியில் பாஜக வேட்பளர் ஹோசியரை எதிர்த்து போட்டியிட்ட முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்குவின் மனைவி 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
இதையடுத்து தாலியரா, கங்ரா உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்க்கியும் கொண்டாடி வருகின்றனர். பீகார் மாநிலத்தின் ருபவுலி, இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் தேஹ்ரா, ஹமிர்பூர், நாலகர்க், மத்திய பிரதேசத்தின் அமரவரா, பஞ்சாப்பின் மேற்கு ஜலந்தர், உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், மங்கலுர், மேற்கு வங்கம் மாநிலத்தில் ராய்கஞ்ச், ரனகட் தக்ஷின், பாக்டா, மணிக்தலா மற்றும் தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி ஆகிய 13 தொகுதிகளில் கடந்த ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.