ஜிந்த்:ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திரத்தில் இருந்து, ராஜஸ்தானின் கோகமேடிக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு பயணிகள் வேன் ஒன்று நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் சுமார் 15 பேர் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில், வேன் நேற்று நள்ளிரவில் ஹிஸார் - சண்டிகர் நெடுஞ்சாலையில் பிதாரனா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று வேனின் மீது அதிவேகமாக மோதியுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன், அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது.
நள்ளிரவு என்பதால், ஒரு சில வாகனங்களே அந்த பகுதியில் சென்றுகொண்டிருந்தன. அதில் சில வாகன ஓட்டிகள் விபத்தைக் கண்டதும், பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால், பயணிகள் அனைவரும் வேனுக்கு அடியில் சிக்கியிருந்ததாலும், இரவு நேரம் என்பதாலும் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்தது.