மகேந்ந்திரகர்க் : அரியானா மாநிலம் மகேந்திரகர்க் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்தனர். ஏறத்தாழ 35 முதல் 40 பள்ளி மாணவர்களுடன் சென்ற பேருந்து உன்ஹனி கிராமத்தில் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 7 மாணவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 20 மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.