ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சத்தீஸ்கரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை! - NAXALS KILLED IN CHHATTISGARH

சத்தீஸ்கரில் தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற மோதலில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பிரதிநிதித்துவ படம்
பிரதிநிதித்துவ படம் (ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2025, 11:03 PM IST

பஸ்தார் (சத்தீஸ்கர்):சத்தீஸ்கரில் தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற மோதலில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கரின் தெற்கு பஸ்தார் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அப்பகுதியில் நக்சலைட்டுகளஐ தேடும் வேட்டை தொடர்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் தரப்பில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை சத்தீஸ்கர் மாநிலம், பிஸாப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இன்று மேலும் 12 பேர் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநில்த்தின் வெவ்வேறு பகுதியில் நடைபெற்று வரும் தேடுதல் வேட்டைகளில், இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 26 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details