வைத்தீஸ்வரன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா - வைத்தீஸ்வரன் கோயில்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14770039-thumbnail-3x2-ngp.jpg)
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசாமி, நவக்கிரகங்கள் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமிகள் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் 10ஆம் நாள் முக்கிய நிகழ்வான இன்று பங்குனி உத்திர விழா நடைபெற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST