திருச்செந்தூர் ஆவணித்திருவிழா சண்முகருக்கு பச்சை சாற்றி வீதி உலா... 26ஆம் தேதி தேரோட்டம் - Arupada House of Lord Muruga
🎬 Watch Now: Feature Video

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணித்திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதனை முன்னிட்டு, இன்று பச்சை சாற்றிய மண்டபத்தில் வைத்து சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுக்கு பால், தயிர் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிக்கு பச்சை சாற்றிய கோலத்தில் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து பச்சைக்கடைசல் சப்பரத்தில் சுவாமி சண்முகர் பச்சை சாற்றிய கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் பச்சை வண்ண மரிக்கொழுந்து மலர்களைத் தூவி அரோகரா பக்தி கோஷங்கள் முழங்க சுவாமியைத் தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி சண்முகர் பச்சை சாற்றியகோலத்தில் எட்டு வீதிகளிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது.
Last Updated : Aug 24, 2022, 6:30 PM IST