திடீரென 50 அடிக்கு கீழே சென்ற வீடு...அதிர்ச்சியில் குகூஸ் மக்கள் - மகாராஷ்டிரா
🎬 Watch Now: Feature Video
மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திராபூர் நகரில் இருக்கும் குகூஸ் நகரின் அம்ராய் வார்டில் உள்ள ஒரு வீட்டில் கஜ்ஜூ மாதவி குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்நிலையில் இவரது வீட்டில் திடீரென ஒரு சிறிய பொத்தல் விழுந்துள்ளது. இதனையடுத்து பொத்தலின் அளவு அதிகரித்ததும், கஜ்ஜூ தனது குடும்பத்துடன் வெளியேறியுள்ளார். அடுத்து சிறிது நேரங்களில் வீடு இடிந்து 50 அடிக்கு கீழே சென்றுள்ளது. இது அப்பகுதி மக்களியே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதால் பலரும் இடம் பெயர்ந்து வருகின்றனர். மேலும் இப்பகுதி ஆங்கிலேயர்களின் காலத்தில் ராபர்ட்சன் இன்க்லைன் என்னும் நிலக்கரி சுரங்கமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.