ஸ்ரீஸ்ரீராதாகிரிதாரி கோயில் தேரோட்டம் - திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதி
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் ஸ்ரீஸ்ரீராதாகிரிதாரி கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஜகன்நாதர், பலதேவர், சுபத்ரை ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வந்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். வழக்கமாக கோயிலின் வெளியில் பவனி வரும் போது உற்சவ மூர்த்தி வெளியில் அருள்பாலிப்பார். ஆனால், இங்கு மூலவர்களான ஜகன்நாதர், பலதேவர், சுபத்ரை ஆகியோர் வெளியில் வந்து அருள்பாலிப்பது விசேஷமாக பார்க்கப்படுகிறது.