வாணியம்பாடி ஜெயின் மகளிர் கல்லூரியில் தேசியக்கொடியுடன் அணிவகுப்பு - மூவண்ண கொடி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16100511-thumbnail-3x2-vnr.jpg)
திருப்பத்தூர்: வாணியம்பாடியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரியில் 75ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி, சுமார் 3,000 மாணவிகள், பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் இணைந்து வெள்ளை நிற ஆடைகளை அணிந்து மூவர்ணக் கொடிகளை கைகளில் ஏந்தியபடி, மூவண்ண நிறங்களில் பலூங்களை வானில் பறக்கவிட்டனர். மேலும், கல்லூரி பேருந்துகளை 75 என்ற எண்ணைபோல் நிற்க வைத்து, இந்திய நாட்டின் மீதுள்ள நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர்.