நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து யானை அட்டகாசம்... பீதியில் மக்கள் - people panic
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: அந்தியூர் அருகே பர்கூர் மலைக்கிராமத்தில் நேற்று (ஆக.30) ஒற்றை காட்டுயானை ஒன்று காவல்நிலையம் பகுதியில் தனியாக வலம் வந்தது. இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் யானையை விரட்டத் தொடங்கிய நிலையில் சுமார் 2 மணி நேரப் போரட்டத்திற்குப் பிறகு காட்டிற்குள் விரட்டினர். இவ்வாறாக அடிக்கடி காட்டுயானைகள் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து வருவதால் மக்கள் பீதியடைந்து வருகின்றனர். எனவே, வனத்துறையின் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.