மாயாற்று வெள்ளப்பெருக்கு: பரிசலில் ஆபத்தான பயணம் செய்யும் மக்கள்! - சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
🎬 Watch Now: Feature Video

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள தெங்குமரஹாடாவில் சுமார் 750 குடும்பங்கள் உள்ளன. தெங்குமராஹாடவை சுற்றிலும் மாயாறு ஓடுவதால், கிராமமக்கள் அன்றாட தேவைக்கு பரிசலில் ஆற்றைக் கடந்து செல்லவேண்டும். கடந்த சில நாள்களாக ஊட்டி, கூடலூர், எபநாடு, கூக்கல்துறை ஆகிய இடங்களில் பெய்த மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றில் தண்ணீர் 5 அடி உயர்ந்துள்ளது. மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அல்லிமாயாறு, தெங்குமரஹாடா, கல்லாம்பாளையம் கிராமமக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.