மயிலாடுதுறையில் வரலாற்று சின்னமாக விளங்கும் மணிக்கூண்டிற்கு தேசிய கொடி வர்ணம் - மணிக்கூண்டிற்கு தேசிய கொடி வர்ணம் தீட்டிய நகராட்சிதுறை
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறையில் ஆக.15 ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி, வரலாற்று சிறப்பு மிக்க மணிக்கூண்டிற்கு, நகராட்சி நிர்வாகத்தினர் தேசியக் கொடி வண்ணம் தீட்டியுள்ளனர். இங்கிலாந்து உலகப் போரில் ஜெர்மனியிடம் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தபோது, இங்கிலாந்து முதல்முறையாக துனிசியாவில் நடந்த போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், அப்துல் காதர் என்பவரால் 1943 ஆம் ஆண்டு கட்டப்பட்டது இம்மணிக்கூண்டு மயிலாடுதுறையின் அடையாளமாக மாறிவிட்டது என்றால் அது மிகையாகாது. இந்திய திருநாட்டின் சுதந்திரத்தை பெருமைபடுத்திம் விதமாக தற்போது மணிக்கூண்டு தேசியக் கொடி வண்ணத்தில் காட்சியளிப்பது பொதுமக்களை கவர்ந்துள்ளது.