புதுச்சேரியில் கடற்கரை திருவிழாவில் ஜோரான காத்தாடி விடும் நிகழ்ச்சி! - நாட்டுப்புற கலை நிகழ்ச்சி
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தவும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் முதன் முறையாக I SEA PONDY 2022 என்ற கடற்கரைத் திருவிழா நேற்று (ஏப்.13) தொடங்கியதை அடுத்து, கடற்கரையில் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, கடல் உணவுத் திருவிழா மற்றும் வாலிபால், பேஷன் ஷோ எனப் பல நிகழ்ச்சிகள் வரும் 17 ஆம் தேதி வரையில் நடக்க உள்ளன. இதன் ஒருபகுதியாக, இன்று (ஏப்.14) கலங்கரை விளக்கம் அருகில் உள்ள மெரினா கடற்கரையில் காத்தாடி விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு காத்தாடியை பறக்க விட்டு வருகின்றனர். காத்தாடி விட பழகாதவர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காத்தாடி விட பயிற்சியும் அளித்தனர். மேலும் அங்கு கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது காண வந்த சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.