பாலமுருகன் கோயிலில் காவடி திருவிழா: முதுகில் அலகு குத்தி தேர் இழுத்த பக்தர்கள் - மயிலாடுதுறை செய்திகள்
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை அருகே வழுவூர், வளையாம்பட்டினத்தில் உள்ள அருள்மிகு பாலமுருகன் கோயிலில் 38ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமியையொட்டி, காவடி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பால் காவடிகள், பன்னீர் காவடிகள், புஷ்ப காவடிகள் ஆகியவற்றை சுமந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும், பாலமுருகன் எழுந்தருளிய தேரினை தங்கள் முதுகில் அலகு குத்தியும், கல் உருளையை முதுகில் கட்டி இழுத்தும் இறைவனுக்கு தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.