Video: 50 ஆயிரம் சாக்பீஸ் துண்டுகளால் காமராஜர் உருவத்தை உருவாக்கி அசத்தல்! - காமராஜர் உருவப்படம்
🎬 Watch Now: Feature Video
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு அம்சமாக 50 ஆயிரம் சாக்பீஸ் துண்டுகளால் காமராஜரின் திரு உருவத்தை உருவாக்கி அசத்தினர். மேலும் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு இந்த மிகப்பெரிய காமராஜர் படத்தை உருவாக்கினர். அதன் கழுகுப்பார்வை காட்சிகள் காண்போரின் கண்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.