நேமம் பெரியகண்மாயில் மீன்பிடித் திருவிழா: உற்சாகமாக கலந்து கொண்ட மக்கள் - சிவகங்கையில் மீன்பிடித் திருவிழா
🎬 Watch Now: Feature Video
குன்றக்குடி அருகே பெரிய கண்மாயில் கிராம பொதுமக்கள் சார்பாக மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக நிறைந்திருந்திருந்த கண்மாய் தற்போது கடும் வெயிலினால் தண்ணீர் குறைந்து காணப்பட்ட நிலையில் நேமம் கிராம மக்கள் மீன்பிடி திருவிழா நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மீன்களை பிடித்து சென்றனர்.