சென்னையில் பழைய இரும்பு குடோனில் தீ விபத்து - பழைய இரும்பு குடோனில் தீ விபத்து
🎬 Watch Now: Feature Video
சென்னை : கொருக்குப்பேட்டை ஒன்டிவீரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலு. இவர் வீட்டின் அருகே உள்ள குடோனில் பழைய இரும்பு பொருட்களை சேமித்து வைத்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து ஐந்து வாகனங்களில் சென்ற தீயணைப்பு துறையினர், சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், குடோனில் இருந்த இரும்பு பொருட்கள், பிளாஸ்டிக் உள்ளிட்டவை எரிந்து சேதமானது.